NRCக்கு எதிராக வலுவான எதிர்ப்பை தொடங்கிய மம்தா…  ஸ்தம்பித்தது கொல்கத்தா!

0

அஸ்ஸாம் தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கு எதிராக மேற்குவங்க முதல்வர் மம்தா பனர்ஜி பிரம்மாண்ட பேரணி நடத்தினார். பல ஆயிரம் திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் கலந்து கொண்டதால் கொல்கத்தா நகரம் ஸ்தம்பித்தது. பிற்பகல் மூன்று மணிக்கு சிந்தி மோராவில் இருந்து தொடங்கிய பேரணி, 5 கி.மீ. கடந்து ஷியாம் பஜாரில் நிறைவுற்றது. இந்த போராட்டத்தின் போது தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கு எதிராக பெரும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
சில அரசியல் காரணங்களுக்காக, வங்கதேசத்தில் இருந்து ஊடுருவியர்களை நீக்குவதாக கூறினார் உள்துறை அமைச்சர் அமித் ஷா. அதன்படி, கடந்த ஆகஸ்ட் 31ம் தேதி 19 லட்சம் பேரின் பெயர்கள் நீக்கியதற்கான பட்டியல் வெளியானது. அதில் நாட்டின் உயர் பதவிகளை அலங்கரித்த குடிமக்களையும், அனைத்து தரப்பு மக்களையும் சேர்த்து இந்தியர்கள் இல்லை என்றது பாசிச பாஜக அரசு.

இந்தப் பட்டியலில் இடம் பெறாதவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது. அடுத்த நடவடிக்கையாக தேசிய குடிமக்கள் பதிவேடு கணக்கெடுக்கும் பணி மேற்கு வங்கத்தில் தொடரும் என்றது மத்திய அரசு.

மக்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, NRCக்கு எதிராக வலுவான எதிர்ப்பு குரலை வெளிப்படுத்தியுள்ளார் மேற்கு வங்க முதல்வர் மம்தா பனர்ஜி.

Leave A Reply