என்.பி.ஆர்-ஐ பாஜக அரசு கைவிடவேண்டும் -100க்கும் மேற்பட்ட அறிஞர்கள் வலியுறுத்தல்

0

குடியுரிமை திருத்த சட்டம், என்.ஆர்.சி, என்.பி.ஆர் ஆகியவற்றுக்கு எதிராக தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் பல்வேறு இடங்களில் தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது. மேற்கு வங்கம், பஞ்சாப், கேரளா, மத்திய பிரதேசம் ஆகிய மாநில அரசுகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து, தங்களது மாநிலங்களில் அமல்படுத்தப்போவதில்லை என தீர்மானம் நிறைவேற்றியுள்ளன.

இந்நிலையில் தேசிய மக்கள் தொகை பதிவேடு (NPR) புதுப்பிக்கும் பணியை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று நூற்றுக்கும் மேற்பட்ட பொருளாதார நிபுணர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

இது தொடர்பாக, டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியர்கள் சி.பி.சந்திரசேகர், அமித்பாதுரி உள்பட 190 பொருளாதார நிபுணர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கூட்டாக சேர்ந்து ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

அதில், “2021ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பு அவசியமானது. ஆனால், அதனுடன் இணைந்து தேசிய மக்கள் தொகை பதிவேடு புதுப்பிக்கும் பணிக்கான கணக்கெடுப்பும் நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. மக்கள்தொகை பதிவேடு தொடர்பாக நாட்டு மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்துகிறது. ஒருரின் குடியுரிமையை அந்த கணக்கெடுப்பு அதிகாரிகள் தீர்மானிக்கக்கூடியதாக உள்ளது.

எனவே, மக்கள்தொகை பதிவேடு புதுப்பிக்கும் பணியை மத்திய அரசு கைவிட வேண்டும் என்றும் அதை மக்கள் தொகை கணக்கெடுப்புடன் எவ்வகையிலும் இணைக்கக்கூடாது எனவும் அவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Comments are closed.