அஸ்ஸாம், ஹரியானாவை தொடர்ந்து உ.பியிலும் முஸ்லிம்களை வெளியேற்ற பாஜக திட்டம்!

0

உத்தர பிரதேசத்திலும் தேசிய குடிமக்கள் பதிவேடு அமல்படுத்தப்படும் என்று அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்

அஸ்ஸாம் மாநிலத்தில் சட்டவிரோதமாக தங்கியுள்ள வெளிநாட்டினரை கண்டறியவதற்காக (NRC) தேசிய குடிமக்கள் பதிவேடு தயாரிக்கப்பட்டது. இந்த பதிவேட்டின் இறுதிப் பட்டியல் அண்மையில் வெளியிடப்பட்டது. இதில் 19 லட்சம் பேரின் பெயர்கள் இடம்பெறவில்லை. அதில் பெருமான்மையானவர்கள் முஸ்லிம்கள். அத்துடன் அஸ்ஸாம் மாநிலத்தில் உள்ள பல இஸ்லாமிய அரசியல் தலைவர்கள் பெயர்கள் இடம்பெறாதது அதிர்ச்சியை எற்படுத்தியது.

தேசிய குடிமக்கள் பதிவேடு திட்டத்திற்கு பாஜக ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் ஹரியானாவில் தேசிய குடிமக்கள் பதிவேடு தயாரிக்கப்படும் என்று மாநில முதல்வர் மனோகர் லால் கட்டார் நேற்று முன்தினம் அறிவித்தார்.

அதை தொடர்ந்து தற்போது உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்ய நாத் கூறும்போது, “தேசத்தின் பாதுகாப்புக்காக நாடு முழுவதும் தேசிய குடிமக்கள் பதிவேடு தயாரிக்கப்பட வேண்டும். உத்தர பிரதேசத்திலும் தேசிய குடிமக்கள் பதிவேடு தயாரிக்கப்படும். இத்திட்டம் மாநிலத்தில் பகுதி, பகுதியாக அமல் செய்யப்படும்” என்று தெரிவித்தார்.

Comments are closed.