“ஒரே நாடு ஒரே ரேசன் கார்டு” திட்டம்: தமிழகத்திற்கு விலக்கு கிடையாது- அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான்!

0

“ஒரே நாடு ஒரே ரேசன் கார்டு” திட்டத்தை தமிழ்நாட்டுக்கு மட்டும் விலக்களிக்க முடியாது என உணவுத்துறை அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் தெரிவித்துள்ளார்.

“ஒரே நாடு ஒரே ரேசன் கார்டு” என்ற புதிய திட்டத்தை பாஜக அரசு நடைமுறைப்படுத்த திட்டமிட்டுள்ளது. இதற்கு தமிழகத்தில் எதிர்ப்பு டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உணவுத்துறை அமைச்சரான ராம்விலாஸ் பஸ்வான் இந்த திட்டத்தை தொடங்கி வைத்தார். முதற்கட்டமாக குஜராத், மகாராஷ்டிரா, ஆந்திரா, தெலங்கானா ஆகிய நான்கு மாநிலங்கலின் இத்திட்டம் செயல்பாட்டுக்கு வந்துள்ளது.

இதுகுறித்து பேசிய ராம்விலாஸ் பஸ்வான், “அனைத்து மாநிலங்களிலும் இந்த திட்டம் அமலுக்கு கொண்டுவரப்படும். “ஒரே நாடு ஒரே ரேசன் கார்டு” திட்டத்தை தமிழ்நாட்டிற்கு மட்டும் விலக்கு அளிக்க முடியாது. அடுத்த ஆண்டு ஜூன் 1ஆம் தேதி முதல் தேசிய அளவில் ”ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு” திட்டம் செயல்படுத்தப்படும்” இவ்வாறு தெரிவித்தார்.

Comments are closed.