ஆன்லைன் விளையாட்டால் மாணவர்கள் மற்றும் இளைஞர்களிடையே மன உளைச்சல் அதிகமாகி தற்கொலை செய்யும் அளவிற்கு தள்ளிப்படுகின்றனர்.
ஆன்லைன் சூதாட்டத்தால் இளைஞர்களை தவறான பாதைக்கு செல்கின்றனர். அவர்களின் வாழ்க்கையையும் எதிர்காலத்தையும் பாழாக்கி விடுகிறது. இதனை கருத்தில் கொண்டு இளைஞர்களின் நலனை பாதுகாக்கும் நடவடிக்கையாக, இந்த ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளை தடை செய்ய வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
இந்த சூழலில், ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்கக் கோரி வழக்கறிஞர் நீலமேகம் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நேற்று முறையீடு செய்தார். அவரது முறையீட்டு மனுவை விசாரரித்த நீதிபதி, “தமிழக அரசு ஆன்லைன் ரம்மி விளையாட்டு தடை செய்வது தொடர்பாக தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. தெலுங்கானா, ஆந்திரா மாநிலங்களில் ஆன்லைன் ரம்மி விளையாட தடை செய்திருப்பது போல் தமிழகத்திலும் தடை செய்வதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருகிறது.” என்று நீதிபதி தெரிவித்தார்.