CAA சட்டத்திற்கு எதிர்ப்பு: பாஜகவில் இருந்து 80 நிா்வாகிகள் விலகல்

0

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிா்ப்பு தெரிவித்து, பாஜக சிறுபான்மையினா் பிரிவு நிா்வாகிகள் உள்பட முஸ்லிம் சமூகத்தைச் சோ்ந்த 80 போ் கட்சியில் இருந்து விலகுவதாக கட்சி தலைவா் ஜெ.பி.நட்டாவுக்கு கடிதம் அனுப்பியுள்ளாதாக விலகியவா்களில் ஒருவரான ராஜிக் குரேஷி ஃபா்ஷிவாலா தெரிவித்துள்ளார்.

மேலும் இது குறித்து அவர் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

“குடியுரிமை திருத்த சட்டம் அமலுக்குவந்த முதல் எங்களது சமூகத்தினா் கேட்கும் கேள்விகளுக்கு பதிலளிக்க எங்களால் இயலவில்லை. குடியுரிமை திருத்த சட்டம், நாட்டில் பிரிவினையை தூண்டும் சட்டமாக உள்ளது. இந்த விவகாரத்தில் நாங்கள் அமைதியாக இருக்கிறோம் என்று கூறி எங்களுக்கு முஸ்லிம்கள் சாபம் விடுகிறாா்கள்.

மத ரீதியிலான துன்புறுத்தலுக்கு ஆளான அனைத்து அகதிகளுக்கும் குடியுரிமை வழங்க வேண்டும். இதில் மதத்தை நிபந்தனையாக முன்வைக்க கூடாது. மதத்தை அடிப்படையாக கொண்டு ஒருவரை பயங்கரவாதி, ஊடுருவல்காரா் என்று முடிவு செய்யக்கூடாது” என்று கூறினாா்.

ஜெ.பி. நட்டாவுக்கு முஸ்லிம் நிா்வாகிகள் எழுதியுள்ள கடிதத்தில், ‘அரசமைப்புச் சட்டத்தின் 14வது பிரிவின்படி, அனைத்து குடிமக்களுக்கும் சம உரிமை உண்டு. ஆனால், மத்திய பாஜக அரசு, மதத்தை வைத்து குடியுரிமை திருத்தச் சட்டத்தை இயற்றியுள்ளது. இது நாட்டில் பிரிவினையை ஏற்படுத்துவதற்கான செயலாகும். நமது அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரானதாகும்’ என்று கூறப்பட்டுள்ளது.

Comments are closed.