பேச்செல்லாம் காந்தி, செயலெல்லாம் கோட்சே: பாஜகவின் இரட்டை வேடம்- உவைசி!

0

மக்களவை எம்.பி அசாதுதீன் உவைசி பாஜக அரசினை விமர்சித்து பேசியுள்ளார். அதில் “நாம் மகாத்மா காந்தியின் 150வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறோம். பாஜவினர் காந்தியை குறித்து உதட்டளவில் பேசுகிறார்கள். ஆனால், அவர்களின் மனதில் நாதுராம் கோட்சே தான் உள்ளார்.

தற்போதைய ஆட்சியாளர்கள் நாதுராம் கோட்சேவை தங்களின் ஹீரோவாக போற்றுகிறார்கள். கோட்சே காந்தியை மூன்று தோட்டாக்களால் கொன்றார். ஆனால், ஒவ்வொரு நாளும் மக்கள் இங்கு கொல்லப்படுகிறார்கள்”.

மேலும் உழவர்களின் தற்கொலைகளைப் பற்றி பேசிய ஓவைசி “காந்தியின் அஹிம்சையைப் புரிந்து கொள்ள வேண்டிய நேரம் இது. காந்தி விவசாயிகளை கவனித்துக் கொண்டார். ஆனால், இன்று விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கிறார்கள். தற்போதைய அரசு என்ன செய்து கொண்டிருக்கிறது…?” என்று கேள்வி எழுப்பினார்.

Comments are closed.