உ.பியில் 25000 ஆதரவற்ற உடல்களை அடக்கம் செய்த முஹம்மது ஷரீஃப்பிற்கு பத்மஸ்ரீ விருது

0

உத்திரபிரதேசத்தில் சுமார் 25,000 ஆதரவற்ற உடல்களுக்கு இறுதிச்சடங்கு செய்த முகம்மது ஷரீஃப்பிற்கு பத்மஸ்ரீ விருது கிடைத்துள்ளது. அயோத்திவாசியான இவர் கடந்த 1993ஆம் ஆண்டு முதல் சமூகப்பணியை செய்து வருகிறார்.

அயோத்திவாசிகளால் ‘ஷரீஃப் சாச்சா’ என அன்புடன் அழைக்கப்படுபவர் முகம்மது ஷரீஃப்(80). சைக்கிள் பழுதுபார்க்கும் கடை வைத்துருக்கும் இவர் அயோத்தி அமைந்துள்ள உ.பி.யின் அவத் பகுதி முழுவதிலும் அறிமுகமானவர்.

இதற்கு அவர் கடந்த 27 வருடங்களாக அடையாளம் தெரியாமலும், ஆதரவில்லாமலும் உயிரிழப்பவர்களுக்கு இறுதிச்சடங்குகள  தனது செலவில் செய்து வருகிறார் ஷரீஃப். இதன் பின்னணியில் அவரது குடும்ப வாழ்க்கையில் நடந்த சோகம் உள்ளது.

கடந்த 1993இல் அருகிலுள்ள சுல்தான்பூருக்கு ஒரு பணியாக சென்ற ஷரீஃப்பின் இளையமகன் முகம்மது ரெய்ஸ் வீடுதிரும்பவில்லை. காவல்துறையில் புகார் அளித்து பல மாதங்கள் தேடியும் கிடைக்கவில்லை.

பிறகு ரெய்ஸின் உடல் அனாதை பிணமாகக் கருதி அடக்கம் செய்யப்பட்டுவிட்டது. இந்த தகவல் காவல்துறையால் பத்திரப்படுத்தி வைக்கப்பட்ட சட்டையின் தையல்காரரின் அடையாளத்தால் அவர் ரெய்ஸ் என்பது தாமதமாகத் தெரிந்தது.

இதையடுத்து இனி தன் மகனை போல் ஆதரவற்றதாக கருதப்பட்டு இறந்த உடல்களுக்கு தாம் இறுதிச்சடங்குகள் செய்வது என ஷரீஃப் உறுதி எடுத்தார். இதில், இந்து, முஸ்லிம், சீக்கியர் மற்றும் கிறித்தவர் உள்ளிட்ட ஜாதிமத பேதமின்றி இப்புனித பணியை ஷரீஃப் செய்து வருகிறார்.

உ.பி.யின் அயோத்தியில் ஆதரவற்று இறப்பவர்கள் எண்ணிக்கை அதிகம். எனவே, 1993இல் இருந்து ஷரீஃப் சுமார் 25,000 உடல்களுக்கு இறுதிச்சடங்கு செய்துள்ளார்.

ஷெரீப்பை பணியை முதன்முறையாக அடையாளம் கண்ட அரசுக்கு அவரது பெயரை குடியரசு தலைவர் விருதிற்கு பரிந்துரைத்துள்ளது. இதை ஏற்று மத்திய அரசு ஷரீஃப்பை பாராட்டி நேற்று முன்தினம் குடியரசு தலைவரால் பத்மஸ்ரீ விருது அளிக்கப்படுகிறது.

-thehindu

Comments are closed.