சீனாவுடன் போருக்கு மோடி தேதி குறித்துவிட்டார்- உ.பி பாஜக தலைவர் பேச்சால் சர்ச்சை

0

பாகிஸ்தான், சீனாவுடன் தொடுக்க மோடி தேதி குறித்துவிட்டதாக உத்தரப் பிரதேச மாநில பாஜக தலைவர் ஸ்வதந்திர தேவ் சிங் தெரிவித்துள்ளார்.

உத்தர பிரதேசம் பாலியா மாவட்டத்தில் சிக்கந்தர்பூர் தொகுதியில் எம்.எல்.ஏ சஞ்சய் யாதவ் தலைமையில் கோயில் பூஜை  நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

அதில் மாநில பாஜக தலைவர் ஸ்வதந்திர தேவ் சிங் கலந்துக்கோண்டு பேசுகையில், “அனைத்திற்கும் தேதி குறிக்கப்படுகிறது. எப்போது நடக்க வேண்டும், என்ன நடக்கவேண்டும், அனைத்தும் முடிவு செய்யப்படுகிறது. ஜம்மு-கஷ்மீர் 370-வது பிரிவு ரத்து, ராமர் கோயில் கட்டுவது என அனைத்திற்குமே தேதி குறிக்கப்பட்டது. பாகிஸ்தான், சீனா நாடுகளுடன் எப்போது போர் தொடங்கவேண்டும் என்பதைக்கூட பிரதமர் மோடி தேதி குறித்துவிட்டார்.

மேலும் சமாஜ்வாதிக் கட்சி, பகுஜன் சமாஜ்கட்சி தொண்டர்களை தீவிரவாதிகளுடன் ஒப்பிட்டும் பாஜக தலைவர் ஸ்வதந்திர தேவ் சிங் பேசினார்.

சீனாவுடனான எல்லை பிரச்சினையை முடிவுக்குக் கொண்டுவரவே இந்தியா விரும்புவதாக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ள நிலையில் பாஜக தலைவர் ஸ்வதந்திர தேவ் சிங் இவ்வாறு பேசியிருப்பது வேடிக்கையாக இருப்பதாக எதிர்க்கட்சியினர் தெரிவித்துள்ளனர்.

Comments are closed.