காஷ்மிர் விவகாரம்: டெல்லி-லாகூர் பேருந்து சேவையை ரத்து செய்த பாகிஸ்தான்!

0

இந்திய அரசு காஷ்மிருக்கு சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்துள்ளதை எதிர்த்து பாகிஸ்தான் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் “லாகூர்-டெல்லி இடையே இயக்கப்படும் பேருந்து சேவையை ரத்து” செய்வதாக பாகிஸ்தானின் தகவல் தொடர்பு அமைச்சர் முராத் சயீத் தெரிவித்துள்ளார்.

ஜம்மு காஷ்மிர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் பாகிஸ்தான், வர்த்தக உறவை முறித்துக்கொண்ட நிலையில், ரயில் போக்குவரத்து, விமான வான்வழி பாதை தடை போன்ற சில நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும், இந்திய படங்களுக்கும் பாகிஸ்தானில் திரையிட தடை விதித்தது.

இந்த நிலையில் லாகூர்-டெல்லி இடையே இயக்கப்பட்ட பேருந்து சேவையையும் பாகிஸ்தான் ரத்து செய்துள்ளது. பாகிஸ்தானின் தகவல் தொடர்பு அமைச்சர் முராத் சயீத் தனது ட்வீட்டர் பதிவில் தெரிவித்துள்ளார். மேலும், தேசிய பாதுகாப்பு கமிட்டி எடுத்த முடிவின்படி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

Comments are closed.