காஷ்மிர் விவகாரம்: இந்திய திரைப்படங்கள் பாகிஸ்தானில் திரையிட தடை!

0

இந்திய அரசு காஷ்மிர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்துள்ளதை அடுத்து இந்தியப் படங்களுக்கும் பாகிஸ்தான் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பாகிஸ்தான் அரசின் தகவல் மற்றும் ஒலிபரப்பு துறையைச் சேர்ந்த ஃபர்டஸ் ஆஷிக் அவான், “எந்த விதமான இந்தியத் திரைப்படங்கள், டிராமா, சீரியல்களும் இனி பாகிஸ்தானில் திரையிடப்படாது.  இந்திய கலாசார நடவடிக்கைகளையும் தடை செய்வதற்கான கொள்கையை அரசாங்கம் வகுத்து வருகிறது” என்று தெரிவித்தார்.

இதற்கு முன்னதாக புல்வாமா தாக்குதலின்போது பாகிஸ்தானில் இந்திய திரைப்படங்கள் திரையிடாமல் இருந்தது.

ஜம்மு காஷ்மிர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் பாகிஸ்தான், வர்த்தக உறவை முறித்துக்கொண்ட நிலையில், ரயில் போக்குவரத்து, விமான வான்வழி பாதை தடை போன்ற சில நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும், இந்திய படங்களுக்கும் பாகிஸ்தானில் திரையிட தடை விதிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply