அர்னாப் கோஸ்வாமி வாட்ஸ்அப் உரையாடல்: வாய் திறக்காத பாஜக தலைவர்கள்

0

டிஆர்பி மோசடி வழக்கில் மும்பை காவல்துறை தாக்கல் செய்த துணை குற்றப்பத்திரிகையில் ரிபப்ளிக் தொலைக்காட்சியின் தலைமை செய்தி ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமி, ஒளிபரப்பு பார்வையாளர் ஆராய்ச்சி கவுன்சில் (BARC) முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி தாஸ்குப்தா இடையேயான வாட்ஸ்அப் உரையாடல்கள் குறித்து கருத்து தெரிவிக்க பாஜகவும்  மறுத்துவிட்டது.

வெள்ளிக்கிழமை நடந்து முடிந்த காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில்,“தேசிய பாதுகாப்பு, அலுவல்முறை இரகசியங்கள் சட்ட மீறல்கள் குறித்து கால அவகாச நிபந்தைனைக்கு உட்பட்ட விசாரணை தேவை. மற்ற இந்தியர்களின் தேசபக்தியை மதிப்பிட்டு, தேசியவாத சான்றிதழ்கள் வழங்கியவர்களின் உண்மை முகங்கள் முற்றிலும் அம்பலமாகி உள்ளது” பாஜக அரசின் தொடர்ந்து வாய்திறக்காமல் இருப்பதால் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இவ்வாறு விமர்சித்துள்ளர்.

இது குறித்து பாஜக அமைச்சர் கூறுகையில், ”இந்த விவகாரத்தில் நாங்கள் தேவையின்றி நுழைய வேண்டிய அவசியமில்லை. அர்னாப் கோஸ்வாமியின் உரையாடலில் அரசுக்கும், கட்சிக்கும் எந்த தொடர்பும் இல்லை.  நாங்கள் நிரூபிக்க வேண்டிய அவசியமும் இல்லை,” என்று கூறினார்.

முன்னதாக, பாலக்கோடு பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தப்போவது அர்னாப் கோஸ்வாமிக்கு முன்கூட்டியே எப்படி தெரிந்தது என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பிருந்தார்.

மேலும் அவர், “அரசின் உயர் பதவிகளில் உள்ள ஐந்து பேருக்கு மட்டும்தான் இந்த தாக்குதல் குறித்து முன்கூட்டியே தெரியும். பிரதமர், பாதுகாப்பு அமைச்சர், உள்துறை அமைச்சர், இந்திய விமானப்படை தலைவர் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர். எனவே இந்த ஐந்து பேரில் ஒருவர்தான் அர்னாப் கோஸ்வாமிக்கு முன்கூட்டியே தகவல் தெரிவித்து இருக்க வேண்டும்” என்று குற்றம்சட்டினார்.

Comments are closed.