பாலியல் வழக்கில் சிக்கிய பாஜக சாமியார் சின்மயானந்த்: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

1

பாலியல் வழக்கில் சிக்கிய முன்னாள் பாஜக அமைச்சரும், சாமியாருமான சின்மயானந்த் மீது விசாரணை மேற்கொள்ள உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பாஜக முன்னாள் அமைச்சரான சின்மயானந்த், மீது  உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள ஷாஜஹான்பூரை சேர்ந்த சட்டக்கல்லூரி மாணவி சின்மயானந்த் மீது பாலியல் குற்றஞ்சாட்டை வைத்து, வீடியோ ஒன்றை சமூக வலைத்தளத்தில் வெளிட்டார்.

பின்னர் காவல் நிலையத்தில் சின்மயானந்த் மீது புகார் அளித்தார். அந்த புகாரில், சின்மயனாந்த் தனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார் என்றும், ஏராளமான பெண்களை அவர் சீரழித்துள்ளார் என்றும் அப்பெண் கூறியிருந்தார். காவல் நிலையத்தில் புகார் அளித்த அந்த மாணவி காணாமல் போய்விட்டதாக அவரது பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். பின்னர் அப்பெண் கிடைத்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதை தொடர்ந்து, அந்த மாணவி அளித்த புகாரின் அடிப்படையில், சின்மயனாந்த் மீது கடந்த மாதம் 27-ஆம் தேதி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்நிலையில், இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், சட்டக்கல்லூரி மாணவி அளித்த 2 புகார்களையும் விசாரணை செய்ய ஐஜி போலிஸ் அதிகாரி தலைமையில் சிறப்பு விசாரணைக் குழு அமைக்கப்பட வேண்டும் என்றும், அதில் எஸ்.பி. அதிகாரி இந்த புகார்களை விசாரிக்க வேண்டும் என்றும், இந்த குழுவின் விசாரணையை அலகாபாத் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி மேற்பார்வை செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.

Discussion1 Comment