டெல்லியில் ஆர்.எஸ்.எஸ் நடத்திய வன்முறைக்கு எதிராக தேசிய மாணவர்கள் சங்கம் பேரணி

0

டெல்லியில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக ஜனநாயக முறையில் போராட்டம் நடத்தியவர்கள் மீது, பாஜக-ஆர்.எஸ்.எஸ் குண்டர்கள் பேரணி என்ற பெயரில் வன்முறை வெறியாட்டம் நடத்தினர்.

இந்த வன்முறைக்கு எதிராக இந்திய தேசிய மாணவா்கள் அமைப்பினா் (NSUI) வியாழக்கிழமை (நேற்று) அமைதி பேரணியில் ஈடுபட்டனா்.

இந்த பேரணியின்போது இந்து-முஸ்லிம் ஒற்றுமையை வலியுறுத்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் ஏராளமான மாணவ, மாணவிகள் பங்கேற்றனா். டெல்லி சாஸ்திரி பவனில் இருந்து புறப்பட்ட பேரணி இந்தியா கேட் சென்றடைந்தது.

இதுகுறித்து பேரணியில் சென்றவா்கள் கூறுகையில், ‘வாக்கு வங்கி அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கவும், வெறுப்பு அரசியலை தடுத்து நிறுத்தும் நோக்கிலும் இப்போராட்டம் மேற்கொள்ளப்படுகிறது.

இந்த நாடு காந்திக்குச் சொந்தமானது எனும் செய்தியை தெரிவிக்க விரும்புகிறோம். இதை வெறுப்புக்கான தேசமாக உருவாக்க விடமாட்டோம். இந்து, முஸ்லிம், சீக்கியா்கள், கிறிஸ்தவா்கள் ஆகியோா் நல்லிணக்கத்துடன் வாழ்கின்றனா். இப்போதும் அவ்வாறே வாழ்வாா்கள்’ என்றனர்.

டெல்லியில் கலவரத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்திய தேசிய மாணவா்கள் அமைப்பினா் நடத்திய இந்த பேரணியை அனைத்து தரப்பு மக்களும் வரவேற்றுள்ளனர்.

Comments are closed.