பிஸ்கட் விற்பனை வீழ்ச்சி: 10,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்யும் பார்லே நிறுவனம்!

0

பிஸ்கட் விற்பனை சரிந்துள்ளதால் ஊழியர்களை பணி நீக்கம் செய்ய பார்லே பிஸ்கட் நிறுவனம் முடிவு எடுத்துள்ளது.

பாஜகவின் தவறான பொருளாதார கொள்கைகளால் இந்திய பொருளாதாரம் படிப்படியாக சரிந்து வருகிறது. இதிலிருந்து பல நிறுவனங்கள் முற்றிலும் முடங்கி மூடப்படும் நிலைக்கு வந்துள்ளது.

அந்த வகையில் பிஸ்கட் விற்பனை செய்வதும் கடினமாக இருப்பதாக,” பிரிட்டானியா பிஸ்கட் நிறுவனத்தின் இயக்குநர் வருத்தம் தெரிவித்துள்ளார்.

பிரிட்டானியா நிறுவனத்தை தொடர்ந்து பார்லே நிறுவனமும் பொருளாதார நெருக்கடியில் இருப்பதாக அறிக்கை வெளியிட்டுள்ளது. “பிஸ்கட்டுகளுக்கு விதிக்கப்பட்ட ஜிஎஸ்டி 12 சதவிதத்திலிருந்து 18 சதவிதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் பிஸ்கட் விலையை உயர்த்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதால், விற்பனை சரிந்துள்ளது” என பார்லே நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும் இந்த பொருளாதார நெருக்கடியை சமாளிக்க முடியாமல் 10 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய முடிவெடுத்துள்ளதாகவும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments are closed.