நான் ஊடுருவியவன் என்றால் மோடி, அமித்ஷாவும் ஊடுருவியவர்கள் தான்- காங்கிரஸ் எம்.பி

0

மக்களவையில் காங்கிரஸ் எம்.பி. ஆதிர் ரஞ்சன் சவுத்ரி பேசுகையில், “ஆளும் கட்சியினர் தன்னை ஊடுருவியவர் என்று பலமுறை கூறி கிண்டல் செய்யகிறார்கள். நான் கூறுகிறேன், ஆமாம் நான் ஊடுருவியவர்தான். நான் கறையான்தான். என்னைப் போல் நரேந்திர மோடியும் குஜராத்தில் இருந்து டெல்லிக்குள் ஊடுருவியர்தான், அமித் ஷாவும் ஊடுருவியவர்தான்” என தெரிவித்தார்.

இதற்கிடையே  மோடி, அமித்ஷா குறித்து காங்கிரஸ் எம்.பி. ஆதிர் ரஞ்சன் சவுத்ரி பேசியதற்கு அவையில் இருந்த பாஜக எம்.பி.க்கள் அனைவரும் எதிர்ப்பு தெரிவித்து மன்னிப்பு கேட்க கோரினர்.

காங்கிரஸ் எம்.பி. ஆதிர் ரஞ்சன் ஜோஷி பேசுவதற்கு முன், அவர் கட்சியின் தலைவர் எங்கிருந்து வந்தவர் என்பதை சிந்திப்பாரா? அவரை ஊடுருவியவர் என்று கூறலாமா? சவுத்ரி பேசியதற்கு மன்னிப்பு கோர வேண்டும்” என அமைச்சர் பிரகலாத் ஜோஷி  தெரிவித்தார்.

மேலும் நாடாளுமன்ற விவகாரத்துறை இணையமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வாலும் “சவுத்ரி பேசியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும்” என வலியுறுத்தியதால் அவையில் சலசலப்பு ஏற்பட்டது.

Comments are closed.