விவசாயிகள் மீது போலிஸ் நடத்திய தாக்குதலில் ஒருவர் பலி

0

புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக 62 நாட்களுக்கும் மேலாக விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இன்று டெல்லியில் விவசாயிகள் இணைந்து மாபெரும் டிராக்டர் பேரணியை முன்னெத்தனர்.

இதற்காக சிங்கு எல்லையில் இருந்து டெல்லிக்குள் டிராக்டர்களுடன் விவசாயிகள் நுழைந்தால், அவர்கள் மீது காவல்துறையினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். குடியரசு தினமான இன்று விவசாயிகள் மீது தடியடி, கண்ணீர் புகைக் குண்டு வீச்சை பாஜக அரசு நடத்தி இருக்கிறது.  இதனால் அப்பகுதிகளில் பரபரப்பு நிலவி வருகிறது. போலிஸ் தாக்குதலில் உத்தரகாண்ட் மாநில விவசாயி ஒருவர் உயிரிழந்ததால் அவரது உடலில் மூவர்ணக் கொடியைப் போர்த்தி விவசாயிகள் சாலை மறியல் ஈடுபட்டனர்.

டிராக்டர் பேரணியில் ஈடுபட்ட விவசாயிகள் தற்போது தலைநகர் டெல்லி செங்கோட்டைக்கு சென்றுள்ளனர். பின்னர்  செங்கோட்டையில் உள்ள ஒரு கொடி கம்பத்தில் ஏறி விவசாயிகள் விவசாயக்கொடியை ஏற்றினர்.

தேசிய கொடியை அகற்றிவிட்டு காலிஸ்தான் கொடியை ஏற்றுவதாக, சங்பரிவார் அமைப்புகள் பொய் பிரச்சாரம் செய்து வருகின்றனர். அதற்கு உறுதுணையாக விஷம மீடியாக்களும் பொய் செய்திகளை வெளியிட்டு வருகின்றன.

விவசாயிகள் போராட்டம் திவிரமடைந்துள்ளாதால் சிங்கு, காசிபூர், திக்ரி உள்ளிட்ட எல்லைப் பகுதிகளில் இன்று நள்ளிரவு வரை இணைய சேவை துண்டிக்கப்படுள்ளது. இந்நிலையில் இன்று நள்ளிரவு முதல் நாடாளுமன்ற கூட்டத்தொடர் முடியும் வரை தில்லியில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

விவசாயிகள் மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதலுக்கு அரசியல் தலைவர்கள் கண்டம் தெரிவித்ததோடு, நாட்டின் நலனுக்காக விவசாயிகளுக்கு எதிரான வேளாண் சட்டங்களை மத்திய பாஜக அரசு திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.

Comments are closed.