பெஹ்லுகான் கொலை வழக்கில் இருவர் குற்றவாளி என உறுதி

0

கடந்த 2017 ஏப்ரல் 1ஆம் தேதி பெஹ்லுகான் மற்றும் அவரது இரு மகன்கள் பசுக்களை வாகனத்தில் ஏற்றிக்கொண்டு ஜெய்ப்பூருக்குச் சென்றுகொண்டிருந்தனர். பெஹ்ரார் என்னும் இடத்தில் அவர்களை வழிமறித்த பசு குண்டர்கள், மூவரையும் கடுமையாக தாக்கினர். இரண்டு நாள்களில் பெஹ்லுகான் சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார். அவர் தாக்கப்படும் வீடியோ, நாடு முழுவதும் வைரலாக பரவி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த வழக்கு விசாரணை குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்தது. இதில் போதிய ஆதாரங்கள் இல்லாததால், கைதுசெய்யப்பட்ட எட்டு பேரில் ஆறு பேரை நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது. மற்ற இருவர்களளும் சிறார்களாக இருப்பதால், அவர்களை சிறார் நீதிமன்றத்தில் விசாரிக்க உத்தரவிட்டது.

பின்னர் பெஹ்லுகானின் இரு மகன்களும் பசுவதைத்தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.

இந்த தீர்ப்புக்குப் பிறகு, ராஜஸ்தான் அரசு, இந்த வழக்கை மீண்டும் விசாரிக்க உத்தரவிட்டது. பின்னர் இவ்வழக்கை விசாரிக்க சிறப்பு விசாரணைக் குழுவவையும் அமைத்ததது.

தற்போது மீண்டும் அந்த வழக்கு சிறார் நீதிமன்றமத்தில் விசாரணைக்கு வந்துள்ளது. சிறாராக உள்ள இருவரில் ஒருவர் 16 வயதுடையவர் என்பதால் சிறார் மஜிஸ்டிரேட் நீதிமன்றத்தில் விசாரணைக்கு உள்ளார்.

இதுகுறித்து நீதிபதி யோகேந்திர கட்டனா, “பெஹ்லுக்கான் கொலையில் பயன்படுத்தப்பட்ட ஆதாரங்கள் குறித்து தனக்கு தெரியாது. சிறார் நீதிமன்றத்தில் விசாரணையின் போது பிரதான வழக்கில் ஏற்பட்ட குறைபாடுகள் தற்போது தீர்க்கப்படலாம். சிறார் நீதிமன்றத்தில் அரசு தரப்பில் புதிய ஆதாரங்கள் உள்ளன. ஆகையால் தற்போது இது இரண்டு சிறுவர்கள் தண்டனைக்கு வழிவகுத்த்துள்ளது” என்றார் நீதிபதி.

ஆகஸ்ட் 17 ஆம் தேதி சிறப்பு விசாரணை குழு உருவாக்கப்பட்டு, அதன்பிறகு 84 பக்க அறிக்கையை செப்டம்பர் 5 ஆம் தேதி தலைமை காவல்துரை ஆணையர் பூபேந்திர சிங்கிடம் வழங்கியது  ராஜஸ்தான் அரசு.

Comments are closed.