“துப்பாக்கிச்சூட்டின்போது பயந்து நடுங்கிவிட்டீர்கள்: அந்த பயம் எப்போதும் இருக்க வேண்டும்”-பாஜக வேட்பாளர்

0

டெல்லி ஷாகீன் பாக்கில் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து போராட்டம் நடத்துபவர்களை சுட்டுக் கொல்ல வேண்டும்’ என்று சில நாட்களுக்கு முன்பு மத்திய அமைச்சர் அனுராக் தாக்குர் பேசியிருந்தார்.

அதுபோலவே ‘மசூதிகளை இடித்துத்தள்ள வேண்டும்’ என்று பர்வேஷ் வர்மாவும், ‘ஷாக்கீன் போராட்டக்காரர்கள் பாலியல் குற்றவாளிகள்’ என்று கபில் மிஸ்ராவும் வன்முறையை தூண்டும் போக்கில் பேசியிருந்தனர். இதனால் அவர்களை பிரச்சாரம் செய்ய  தேர்தல் ஆணையம் தடை விதித்தது.

இந்த கூழலில் தான் டெல்லி ஜாமியா மிலியா பல்கலைக்கழக மாணவர்கள் ‘CAA சட்டத்திற்கு எதிராக அமைதியான முறையில் நடத்திக் கொண்டிருந்த போராட்டத்தில், ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்த “ராம்பக்த் கோபால்” என்ற இந்துத்துவா தீவிரவாதி திடீரென புகுந்து துப்பாக்கிச் சூடு நடத்தினான்.  இதில் பல்கலை கழகத்தை மாணவர் ஒருவர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த துப்பாக்கிச்சூடு நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. அனுராக் தாக்குர், கபில் மிஸ்ரா, பர்வேஷ் வர்மா ஆகிய 3 பேரையும் கைதுசெய்ய வேண்டும் என்று ஷாகீன் பாக் போராட்டக்காரர்கள், காவல்துறைக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

இந்நிலையில், ஷாகீன் பாக் போராட்டக்காரர்கள் தங்களை பார்த்துபயப்படுவதை வரவேற்பதாகவும், அவர்களுக்கு எங்கள் மீது எப்போதுமே இவ்வாறு பயம் இருக்க வேண்டும் என்றும் கபில் மிஸ்ரா மீண்டும் வன்முறையை வார்த்தைகளால் தூண்டியுள்ளார். நீங்கள் இவ்வாறுதான் பயப்பட வேண்டும் என்று  ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் கபில் மிஸ்ரா.

Comments are closed.