“பெரியார் ஒரு அறிவார்ந்த தீவிரவாதி” -பாபா ராம்தேவ் சர்ச்சை கருத்து

0

பெரியாரை அறிவார்ந்த தீவிரவாதி என கூறிய பாபா ராம்தேவுக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

 

சமீபத்தில் ஒரு ஊடகத்திற்கு பேட்டியளித்த பாபா ராம்தேவ், பெரியார் டாக்டர் அம்பேத்கர் ஆகியோரை பின்பற்றுபவர்களைக் கண்டு, கவலையாக உள்ளது என்றும் தந்தை பெரியாரை ‘’அறிவார்ந்த தீவிரவாதி’’ என்றும் தெரிவித்துள்ளார்.

பாபா ராம்தேவ் இவ்வாறு கூறியதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று ட்விட்டரில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு, அவரது பதஞ்சலி நிறுவனத்தின் தயாரிப்புகளை புறக்கணிக்க வேண்டும் என்று #RamdevInsultsPeriyar, #ArrestRamdev, #ShutdownPatanjali போன்ற ஹேஸ்டெகள் டிரண்டாகியது.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், ‘தந்தை பெரியார் மற்றும் கொள்கைகள் மீது வலதுசாரி சக்திகள் குறிவைத்து நிகழ்த்தப்படும் தாக்குதல்களை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராடியவர் பெரியார், பெண்ணுரிமைக்காக குரல் கொடுத்தார். சாதி முறைக்கு எதிராகப் பேசினார். ஆதிக்க சக்திகளுக்கு எதிரான கருத்தியலை திராவிட முன்னேற்ற கழகம் என்றும் பாதுகாக்கும்’ என்று தெரிவித்துள்ளார்.

Comments are closed.