PFI ஒற்றுமை அணிவகுப்பிற்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி: உத்தரவுக்கு தேசிய பொதுச்செயலாளர் வரவேற்பு!

0

பத்திரிகை செய்தி

பாப்புலர் ஃப்ரண்டின் ஒற்றுமை அணிவகுப்பிற்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதிப்ஃபி: உத்தரவுக்கு தேசிய பொதுச்செயலாளர் வரவேற்பு!

பிப்ரவரி 17, 2019 பாப்புலர் ஃப்ரண்ட் தினத்தில் ஒற்றுமை அணிவகுப்புக்கு அனுமதி மறுத்த காவல்துறையின் உத்தரவை சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை தள்ளுபடிச் செய்துள்ளது.

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அதன் துவக்க நாளான பிப்ரவரி 17 தினத்தை பல வருடங்களாக கொண்டாடி வருகிறது. தொண்டர்களின் பரேடுடன் கூடிய ஒற்றுமை அணிவகுப்பு மூன்று தென் மாநிலங்களில் நடத்தப்படும் கொண்டாட்டத்தின் சிறப்பம்சமாகும். “வெறுப்பு அரசியலை தோற்கடிப்போம்” என்பது 2019 ஒற்றுமை அணிவகுப்பின் கருப்பொருளாகும்.

கேரளா மற்றும் கர்நாடகா அரசுகள் இந்நிகழ்ச்சிகளுக்கு அனுமதி அளித்த போதிலும், கடைசி தருணத்தில் தமிழ்நாடு காவல்துறை அனுமதி மறுத்தது. இந்த மறுத்துரைக்கப்பட்ட ஆணையை சட்டவிரோதம் என்று கூறி நிரகாரிக்க கோரியும், அமைப்பு நடத்தும் ஒற்றுமை அணிவகுப்பு மற்றும் பொதுக்கூட்டத்திற்கு அனுமதி வழங்க கோரியும் நெல்லை மாவட்ட தலைவர் ஜெ.முஹம்மது அலி சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் ரிட் மனுவை தாக்கல் செய்தார்.

மூத்த வழக்கறிஞர் டி.லஜபதி ராய் மற்றும் வழக்கறிஞர்கள் என்.எம்.ஷாஜகான், எஸ்.ஏ.எஸ் அலாவுதீன் மற்றும் எம்.எம்.அப்பாஸ் ஆகியோர் மனுதாரருக்காக ஆஜராகினர். எதிர் வழக்காளர்களுக்காக அரசு வழக்கறிஞர் ஆஜராகி முறையீடு செய்வதில் தகுதி இருப்பதாக நீதிமன்றம் கருதவில்லை என்று மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்ற கிளை தெரிவித்தது.

நமது நாட்டை போன்ற ஒரு சுதந்திர நாட்டில் நியாயமான கட்டுப்பாடுகளுடன் பேச்சு சுதந்திரம் பாதுகாக்கப்படவேண்டியது அவசியமாகும். கட்டாயம் எதிர் தரப்பினர் அனுமதி வழங்கியிருக்க வேண்டும். இதனைத் தொடர்ந்து மறுத்துரைக்கப்பட்ட ஆணை ரத்துச் செய்யப்பட்டதாக நீதிமன்றம் உத்தரவிட்டது.

உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவை வரவேற்று பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய பொதுச் செயலாளர் எம்.முஹம்மது அலி ஜின்னா, “இந்தியாவின் அரசியல் சாசனம் தனது குடிமக்களுக்கு உத்தரவாதம் அளித்துள்ள ஒன்று கூடும் சுதந்திரம், பேச்சு மற்றும் கருத்து சுதந்திரம் ஆகியவற்றை மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றம் உறுதிப்படுத்தியுள்ளது. இந்த உத்தரவு தங்களது அரசியல் எஜமானர்களின் கட்டாயத்திற்கு உட்பட்டு தொடர்ந்து சிறுபான்மை அமைப்புகளின் நிகழ்ச்சிகளை தடுக்க முயற்சிக்கும் மாநில காவல்துறைக்கு கிடைத்த பலத்த அடியாகும்” என்று தெரிவித்தார்.

இப்படிக்கு

டாக்டர். முஹம்மது ஷம்மூன்,
தலைவர், ஊடகம் மற்றும் மக்கள் தொடர்பு,
பாப்புலர் ஃப்ரண்ட், தலைமையகம், புது தில்லி.

Comments are closed.