PFI டெல்லி மாநில நிர்வாகிகள் கைதை எதிர்த்து போராடுங்கள் -பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா

0

பத்திரிகை செய்தி

பாப்புலர் ஃப்ரண்ட் டெல்லி மாநில நிர்வாகிகள் கைதை எதிர்த்து போராடுங்கள்!

Image may contain: 1 person, textஉத்தர பிரதேச பாஜக அரசின் வழியைப் பின்பற்றி, மத்திய அரசாங்கத்தின் கீழ் இயங்கும் டெல்லி காவல்துறையினர் பாப்புலர் ஃப்ரண்ட் உறுப்பினர்கள் மற்றும் தலைவர்களை வடகிழக்கு டெல்லியில் நடந்த வன்முறைக்கு காரணமென பொய்யாக தொடர்புபடுத்தி கைது வேட்டையை தொடர்கின்றனர். சங்பரிவார் மற்றும் டெல்லி காவல்துறை இருவரும் இதற்கு பொறுப்பாவர். ஒரு ஜனநாயக போராட்டத்திற்கான தயாரிப்புகளில் ஈடுபட்டிருந்த நிலையில், பாப்புலர ஃப்ரண்டின் டெல்லி மாநில தலைவர் பர்வேஸ் அகமது, மாநில செயலாளர் முகமது இலியாஸ், மாநில அலுவலக செயலாளர் முகீத் ஆகியோர் டெல்லி காவல்துறையால் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். முன்னதாக மற்றொரு பாப்புலர் ஃப்ரண்ட் உறுப்பினர் டானிஷ் இட்டுக்கட்டப்பட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார். மேலும், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவை அவதூறு செய்வதற்கான தொடர் பிரச்சாரம் நடந்து வருகிறது. உண்மையில், இலக்கு வெறுமனே ஒரு குறிப்பிட்ட அமைப்பு அல்ல. மாறாக CAA-NPR-NRC டெல்லி படுகொலைகள் மற்றும் ஆர்.எஸ்.எஸ். பாஜகவின் மறைமுக திட்டங்களை எதிர்க்கும் அனைத்து குரல்களும் குறிவைக்கப்படுகின்றன. மதச்சார்பற்ற, ஜனநாயக மற்றும் சிவில் உரிமைகள் சம்பந்தப்பட்ட அனைவரையும் டெல்லி முஸ்லிம்களின் வேட்டையை எதிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

இப்படிக்கு

அனிஸ் அகமது
தேசிய பொதுச் செயலாளர்,
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா,
புது தில்லி.

Comments are closed.