வேண்டுமென்றே 4 பேரையும் என்கவுண்டரின் சுட்டுக்கொன்றுவிட்டனர்- உறவினர்கள்

0

தெலங்கானாவில் காணாமல் போன கால்நடை பெண் மருத்துவரின் உடல் எரிந்த நிலையில் கடந்த 28ஆம் தேதி கண்டெடுக்கப்பட்டது.

பிரேத பரிசோதனையில் அவா் பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்டது தெரியவந்தது. இந்த சம்பவம் தொடா்பாக கைதான 4 பேரை, போலிஸார் என்கவுண்டரில் சுட்டனர். உச்சநீதிமன்றத்தின் தலையீட்டின் பிறகு, நால்வரின் உடல்களையும் டிசம்பா் 9ஆம் தேதி இரவு 8 மணி வரை பாதுகாத்து வைக்குமாறு மாநில அரசுக்கு தெலங்கானா உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதையடுத்து, தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் 7 போ் கொண்ட உண்மை கண்டறியும் குழு, என்கவுன்ட்டா் நடைபெற்ற இடத்துக்கு சென்று விசாரணயை தொடக்கியது. முன்னதாக மருத்துவமனைக்கு சென்று அங்குள்ள 4 பேரின் உடல்களை ஆய்வு செய்தது.

பின்னர், சுடப்பட்டு உயிரிழந்த 4 பேரின் உறவினர்களையும் ஐதராபாத் வரவழைத்து, அவர்களிடம் அக்குழு விசாரணை நடத்தி, வாக்குமூலம் பெற்றது.

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினா் கூறுகையில், “நெருக்கடிகளுக்கு பணிந்து 4 பேரையும் போலீஸாா் வேண்டுமென்றே சுட்டுக் கொன்று விட்டனா். இதுபோன்ற குற்ற செயல்களில் ஈடுபட்டவா்கள் சிறையில் இருக்கும்போது, இவா்களை மட்டும் ஏன் கொலை செய்ய வேண்டும்’ என்று கேள்வி எழுப்பினர்.

Comments are closed.