குடிமக்களுக்கான அவசரகால நிவாரண நிதிக்கு (பிஎம் கேர்ஸ்) நன்கொடை வழங்கியவர்களின் விவரங்களை வெளியிட நரேந்திர மோடி தயங்குவது ஏன் என ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து அவர் தனது வெளியிட்ட பதிவில், ‘சீன நிறுவனங்களான ஹவாய், ஷாவ்மி, டிக் டாக், ஒன் ப்ளஸ் போன்றவை கரோனா நோய்த்தொற்று தடுப்பு நடவடிக்கைகளுக்காக PM CARES நிவாரண நிதிக்கு நன்கொடை அளித்துள்ளன.
நிவாரண நிதிக்கு நன்கொடை அளித்தவர்களின் பெயர் பட்டியலை வெளியிடுவதில் மோடி எதற்காக தயங்குகிறார் என்று தெரியவில்லை. சீன நிறுவனங்கள் நன்கொடை அளித்தது அனைவருக்கும் தெரியும். இந்த விவரங்களை வெளியிட பிரதமர் ஏன் மிகவும் அச்சப்படுகிறார்’ என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
PM cares நிவாரண நிதியத்தை மறுஆய்வு செய்வதற்கான நாடாளுமன்ற குழுவின் நடவடிக்கைகளை பாஜக எம்.பி.க்கள் குழு தடுத்ததாகக் கூறும் ஊடக அறிக்கையை ராகுல் மேற்கோள் காட்டியிருந்தார்.
நிவாரண நிதிக்கு பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட நன்கொடை குறித்து முறையாக தணிக்கை செய்ய வேண்டும் என ராகல் காந்தி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.