PM CARES நிதி கணக்கை தணிக்கை செய்யப்போவதில்லை -சிஏஜி முடிவு

0

கொரோனா வைரஸ் பெரும் பாதிப்பாக மாறியதை அடுத்து மத்திய அரசு, PM CARES FUND என்னும் புதிய நிதிக் கணக்கை தொடங்கியது. இந்த கணக்கில் தொடர்ந்து பலரும் நிதியுதவி செலுத்து வரும் நிலையில், அது தணிக்கை செய்யப்படாது எனறு இந்தியத் தலைமை கணக்கு தணிக்கை எனப்படும் சிஏஜி தெரிவித்துள்ளது.

இது குறித்து சிஏஜி அலுவலகத்தின் அதிகாரி கூறுகையில், “இந்த PM CARES ஃபண்டில் தனி நபர் மற்றும் நிறுவனங்கள் நிதியுதவி செய்வதனால் அதை தணிக்கை செய்யும் உரிமை எங்களுக்கு இல்லை,” என்று கூறியுள்ளார்.

கடந்த மார்ச் 28 ஆம் தேதி, மத்திய அமைச்சரவை PM CARES டிரஸ்டை உருவாக்கியது. அதன் தலைவராக நரேந்திர மோடி நியமிக்கப்பட்டார்.

“ PM CARES குழுவை சேர்ந்தவர்கள் எங்களிடம் தணிக்கை செய்யச் சொல்லி கோரிக்கை வைக்காத நிலையில், எங்களால் அதை தணிக்கை செய்ய முடியாது,” என்றும் அந்த சிஏஜி அதிகாரி கூறியுள்ளார்.

கொரோனா வைரஸ் தாக்குதல் நாளுக்கு நாள் அதிரித்ததை தொடர்ந்து மோடி உள்ளிட்ட, மத்திய அரசை சேர்ந்த பலர், PM CARES ஃபண்டுக்கு நிதியுதவி செய்ய வேண்டுமென்று கோரிக்கை வைத்து வருகிறார்கள்.

PM CARES நிதி, தனி நபர்கள், பெரு நிறுவனங்கள், முக்கிய புள்ளிகளிடமிருந்து வட்டியில்லா நிதியை பெறுகின்றன. பலரும் பல கோடி ரூபாய்க்கு PM CARES ஃபண்டில் தங்கள் நிதியுதிவியைச் செலுத்தி வருகிறார்கள்.

PM CARES ஃபண்டு, அரசு ஆடிட்டரால் தணிக்கை செய்யப்படாதது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வரும் நிலையில், பல மாநில முதலமைச்சர்கள் தங்கள் மாநில நிவாரண நிதிகளைவிட PM CARES நிதிக்கே முனனுரிமை அளித்தது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.