ஹரியானாவில் விவசாயிகள் மீது தடியடி நடத்தி அராஜகத்தில் ஈடுபட்ட காவல்துறை

0

ஹரியானா மாநிலத்தில் முதலமைச்சர் மனோகர்லால் கட்டார் நடத்திய வேளாண் மசோதாக்கள் குறித்த விளக்கக் கூட்டத்திற்கு டெல்லியில் போராட்டம் நடத்தி வந்த விவசாயிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதனால் அந்த விளக்கக் கூட்டம் நடைபெறும் இடத்ததிற்குக சென்ற விவசாயிகள் மீது போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர். மேலும் கண்ணீர் புகை குண்டுகள் வீசி தடுத்தனர்.

இதனால் அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவியது. மேலும் வயலுக்குள் இறங்கி விவசாயிகள் மீது போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர். இதில் பல விவசாயிகள் பலமான காயங்கள் எற்பட்டது.

இதன் காரணமாக அப்பகுதியில் நடைபெற இருந்த விளக்க கூட்டத்தை முதலமைச்சர் மனோகர்லால் கட்டர் ரத்து செய்துவிட்டு புறப்பட்டு சென்றார். அங்கிருந்த பல பாஜக எம்.எல்.ஏக்களை போலிசார் அழைத்துச் சென்றனர்.

Comments are closed.