விவசாயிகளை கொடூரமாக தாக்கிய காவல்துறை: பாதிக்கப்பட்டவர்கள் மீது வழக்குப்பதிவு

0

புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக 62 நாட்களுக்கும் மேலாக விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இன்று டெல்லியில் விவசாயிகள் இணைந்து மாபெரும் டிராக்டர் பேரணியை முன்னெத்தனர்.

இதற்காக சிங்கு எல்லையில் இருந்து டெல்லிக்குள் டிராக்டர்களுடன் விவசாயிகள் நுழைந்தால், அவர்கள் மீது காவல்துறையினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். குடியரசு தினமான இன்று விவசாயிகள் மீது தடியடி, கண்ணீர் புகைக் குண்டு வீச்சை பாஜக அரசு நடத்தி இருக்கிறது.  இதனால் அப்பகுதிகளில் பரபரப்பு நிலவி வருகிறது. போலிஸ் தாக்குதலில் உத்தரகாண்ட் மாநில விவசாயி ஒருவர் உயிரிழந்ததால் அவரது உடலில் மூவர்ணக் கொடியைப் போர்த்தி விவசாயிகள் சாலை மறியல் ஈடுபட்டனர்.

டிராக்டர் பேரணியில் ஈடுபட்ட விவசாயிகள் தற்போது தலைநகர் டெல்லி செங்கோட்டைக்கு சென்றுள்ளனர். பின்னர்  செங்கோட்டையில் உள்ள ஒரு கொடி கம்பத்தில் ஏறி விவசாயிகள் விவசாயக்கொடியை ஏற்றினர்.

தேசிய கொடியை அகற்றிவிட்டு காலிஸ்தான் கொடியை ஏற்றுவதாக, சங்பரிவார் அமைப்புகள் பொய் பிரச்சாரம் செய்து வருகின்றனர். அதற்கு உறுதுணையாக விஷம மீடியாக்களும் பொய் செய்திகளை வெளியிட்டு வருகின்றன.

விவசாயிகள் போராட்டம் திவிரமடைந்துள்ளாதால் சிங்கு, காசிபூர், திக்ரி உள்ளிட்ட எல்லைப் பகுதிகளில் நேற்று முதல் இணைய சேவை துண்டிக்கப்படுள்ளது. மேலும் நாடாளுமன்ற கூட்டத்தொடர் முடியும் வரை டெல்லியில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்படுப்பட்டுள்ளது.

பொது சொத்துக்குச்சேதம் விளைவித்தது, ஆயுதங்கள் பயன்படுத்தியது உள்பட பல்வேறு பிரிவுகளில் 22 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும்,  300 போலீசார் காயமடைந்ததாகவும் டெல்லி போலீசார் உள்துறைக்கு அளித்துள்ள ஒரு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments are closed.