தீவிரவாதிகளுக்கு உதவிய போலீஸ் அதிகாரி..!

0

ஜம்மு கஷ்மிரில் நடந்த வாகன சோதனையின்போது  காரை தடுத்து நிறுத்த முயன்றபோது நிற்காமல் சென்றது. பின்னர் போலீஸார் துரத்திச் சென்று  மடக்கிப்பிடித்தனர். காரில் இருந்தவர்களிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். இதில் காரை ஓட்டிச்சென்றது காவல் துணைக்கண்காணிப்பாளர் (டிஎஸ்பி) தாவீந்தர் சிங் என்பது தெரியவந்தது.

காரில் இருந்த தாவீந்தர்சிங் உட்பட மூன்று பேரையும் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தியதில் தகவல்கள் தெரியவந்தது.

இந்நிலையில், டிஎஸ்பி தாவீந்தர் சிங்கை தவிர மற்ற இருவரும் ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பை சேர்ந்த தீவிரவாதிகள் என்பதும்,  பல வருடங்களாக தாவீந்தர் சிங் பல்வேறு உதவிகளை செய்து வந்ததாக தெரியவந்துள்ளது.

இதுகுறித்து ஸ்ரீநகரில் செய்தியாளர்களிடம் ஐ.ஜி. விஜயகுமார் கூறியதாவது: ‘கைது செய்யப்பட்ட டிஎஸ்பி தாவீந்தர் சிங், ஸ்ரீநகர் விமான நிலையத்தில் விமானக் கடத்தல் தடுப்புப் பிரிவில் பணியாற்றி வந்துள்ளார்.   உளவுத் துறை அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், பல முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளன. அவற்றை இப்போது கூற முடியாது. இந்த விஷயத்தில் ரகசியம் காக்கப்படுவது அவசியம்” என்றார்.

இதற்கு முந்னதாக கடந்த 2001ஆம் ஆண்டு நாடாளுமன்ற வளாகம் தாக்கப்பட்ட விவகாரம் குறித்த விசாரணையின்போதும் தேவிந்தா் சிங்கிற்கு தொடா்பு இருப்பதாக கூறப்பட்டது. தேவிந்தா் சிங்கிற்கு அந்த சம்பவத்தில் தொடா்பு இருப்பதாக அந்த வழக்கில் குற்றவாளியான அஃப்சல் குரு தெரிவித்திருந்தாா். ஆனால் விசாரணையில் தேவிந்தா் சிங்கிற்கு எதிராக போதிய ஆதாரம் இல்லாததையடுத்து அந்த விசாரணையிலிருந்து அவா் விடுவிக்கப்பட்டாா்  என்பது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.