காவலருக்கும் கைதிக்கும் ஃபோட்டோஷாப் மாஸ்க்: உ.பி காவல்துறையின் சில்லறைத்தனம்

0

உத்தர பிரதேசத்தின் கோரக்பூர் காவல்துறையினர், கைதி ஒருவருக்கும் போலிஸ்காரர் ஒருவருக்கும் போட்டோஷாப் மூலமாக முகக்கவசம் வரைந்து பதிவிட்ட சம்பவம் சமூக வலைதளத்தில் வைராலாகி வருகிறது.

உத்தர பிரதேச மாநிலம் கோரக்பூரில் கைதியுடன் ஒரு போலிஸ் முகக்கவசம் இல்லாமல் ஒரு போஸ் கொடுத்துள்ளார், பின்னர் முகக்கவசம் அணியாததை சுதாகரித்த காவல்துறையினர் தாங்களாகவே ஒரு முகக்கவசத்தை போட்டோஷாப் மூலமாக வரைந்து தனது அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டது இணையத்தில் பெரும் வைரலாகியுள்ளது.

அந்த படத்தை கொஞ்சம் ஜூம் செய்து பார்த்தாலே இந்த போட்டோஷாப் வேலை தெளிவாகத் தெரிகிறது. இதனை பார்த்த நெட்டிசன்கள் இந்த பதிவை வைத்து கலாய்த்து பல மீம்ஸ்களை உருவாக்கி வருகின்றனர்.

டிவிட்டர் பக்கத்திலிருந்து அப்புகைப்படத்தை நீக்கப்பட்டிருந்தாலும், நூற்றுக்கணக்கான முறை பகிரப்பட்ட ஸ்கிரீன்ஷாட்களால் அது இன்னும் இணையதளத்தில் வலம்வந்து கொண்டுருக்கிறது.

Leave A Reply