பாதுகாப்புதுறையில் பிரக்யா சிங் தாக்கூர்: குண்டுவெடிப்பு குற்றவாளிக்கு அங்கீகாரம்

0

மகாராஷ்டிர மாநிலம் மாலேகானில் கடந்த 2008-ம் ஆண்டு செப்டம்பரில் ஒரு பள்ளிவாசலுக்கு அருகில் மோட்டார் சைக்கிளில் வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்ததில் 6 பேர் இறந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இத்தாக்குதல் சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்ட சாத்வி பிரக்யா சிங் தாக்கூர் 2008-ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு சிறை சென்றார். இவர் மீதான வழக்கை போதிய ஆதாரங்கள் இல்லாத காரணத்தால் கைவிடுவதாக தேசிய புலனாய்வு மையம் (என்.ஐ.ஏ.) 2015-ம் ஆண்டு தெரிவித்தது. ஆனால், விசாரணை நீதிமன்றம் அதனை ஏற்கவில்லை.

குண்டுவெடிப்புக்கு சாத்வியின் இருசக்கர வாகனமே பயன்படுத்தப்பட்டிருந்தது என்பதால், அவரை விடுவிக்க நீதிமன்றம் மறுத்தது. இரண்டு ஆண்டுகளுக்குப் பின் 2017-ல் இவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.

ஜாமீனில் வெளிவந்த பிரக்யா சிங் தாக்கூர், மத்தியப் பிரதேசம் போபால் மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங்கை எதிர்த்துப் போட்டியிட்டு எம்.பி.யாகினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நாடாளுமன்ற பாதுகாப்பு ஆலோசனைக் குழு கடந்த மாதம் 21-ம் தேதி அமைக்கப்பட்டது. 21 உறுப்பினர்கள் கொண்ட அந்தக் குழுவில் எதிர்க்கட்சித் தலைவர்கள் பரூக் அப்துல்லா, திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. சவுகதா ராய், திமுக எம்.பி. ஆ.ராசா, என்சிபி தலைவர் சரத் பவார், பாஜக சார்பில் பல்வேறு எம்.பி.க்களும், போபால் எம்.பி. சாத்வி பிரக்யா சிங் தாக்கூரும் நியமிக்கப்பட்டுள்ளார்

மகாத்மா காந்தியைக் கொன்ற கோட்சே தேசபக்தர் என்று தெரிவித்தார்.மேலும், மும்பை தீவிரவாத தடுப்புப் படையின் தலைவர் ஹேமந்த் கர்கரே, மும்பை தீவிரவாதத் தாக்குதலில் கொல்லப்பட்டதற்கு அவரின் பாவம்தான் காரணம் என்றார். இதுபோன்ற பல்வேறு சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவித்து சிக்கலில் சிக்கினார்.

Comments are closed.