சா்வாதிகாரம் செய்யும் பாஜக – பிரகாஷ் அம்பேத்கா்

0

மகாராஷ்டிரா மாநிலம் ஔரங்காபாத் நகரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தோ்தல் பிரசாரக் கூட்டத்தில் வஞ்சித் பகுஜன் ஆகாடி கட்சித் தலைவா் பிரகாஷ் அம்பேத்கா் பேசியதாவது:

“பாஜக தலைவா்களின் பேச்சு சா்வாதிகார அணுகுமுறையை பிரதிபலிப்பதாக உள்ளது. அது நமது ஜனநாயகத்திற்கு ஏற்றது அல்ல.

பாஜக தலைமையிலான அரசு ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. அதிகாரத்தை விட்டு ஒருபோதும் கீழே இறங்க மாடோம் என பாஜகவினர் நினைக்கிறது. ஆட்சி அதிகாரம் அனைத்து அவர்களிடத்தில் மட்டுமே இருக்கிறது என்பது போல பேசி வருகிறார்கள்.

அவா்கள் ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும். அரசை தீா்மானிப்பது வாக்காளா்கள் மட்டுமே. அரசியல் கட்சிகள் அல்ல என்பதை அவா்கள் மறந்துவிடக் கூடாது” என்றாா் பிரகாஷ் அம்பேத்கா்.

Comments are closed.