ஜார்கண்டில் மருத்துவமனை ஊழியரால் தள்ளிவிடப்பட்ட முஸ்லிம் கர்ப்பிணி: குழந்தை உயிரிழப்பு

0

ஜார்கண்ட் மாநிலம் ஜம்சத்பூரிலுள்ள மகாத்மா காந்தி அரசு மருத்துமனையில் முஸ்லிம் என்ற காரணத்தால் மருத்துவ ஊழியரால் தள்ளபட்ட கர்ப்பிணி பெண், குழந்தையை இழந்துள்ளார்.

ரிஸ்வானா காத்தூன் என்ற கர்ப்பிணி பெண்ணுக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதனால் மருத்துவமனைக்கு விரைந்துவந்த கர்பிணி பெண்ணை, அந்த அரசு மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவ ஊழியர் ஒருவர் “இரத்த ஓட்டத்தோடு எதற்கு வந்தாய்? நோயை பரப்புவதற்கா?” என மிரட்டி தள்ளிவிட்டுள்ளார். அப்போது ரிஸ்வானாவின் மதம் மற்றும் அவரது பிறப்பினை கொச்சைப்படுத்தி பேசியும், செருப்பைக்கொண்டு அடித்தும் அவர் விரட்டியுள்ளார்.

மருத்துவமனையில் மருத்துவர் இல்லாத காரணத்தால் பிரசவம் பார்க்க இயலாது எனக்கூறி, ரிஸ்வானா சிந்திய ரத்தத்தை அவர் மூலமே துடைக்க வைத்துள்ளார்.

பின்னர் வேறு மருத்துவமனைக்கு சென்றவுடன், அவரை பரிசோதித்த மருத்துவர்கள், குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டது என்றனர். இது குறித்து, வீட்டின் அருகில் உள்ளவர்களின் உதவியுடன், மாநில முதல்வருக்கு கடிதம் எழுதியுள்ளதாகவும் அதில் தம்மை கஷ்டப்படுத்திய மருத்துவ ஊழியரின் பெயர் தெரியவில்லை ஆனால் அங்கு பதிவாகிய சிசிடிவி காட்சிகளை காண்பித்தால் அவரை அடையாளம் காட்டுவதாக கூறினார்.

ரிஸ்வானாவின் கணவர் வேறு மாநிலத்தில் தினக்கூலி என்றும் லாக்டவுன் காலத்தில் ஊருக்கு திரும்ப முடியாமல் மும்பையில் சிக்கிக்கிடப்பதாக கூறுகிறார் ரிஸ்வானா.

சரியான நேரத்தில் அந்த அரசு மருத்துவமனையில் சிகிச்சை கொடுக்கப்பட்டிருந்தால் என் குழந்தையை இழந்திருக்கமாட்டேன் என கண்ணீருடன் தெரிவித்தார் ரிஸ்வானா.

Comments are closed.