முதற்கட்டமாக 150 ரயில்களை தனியாருக்கு தாரை வார்த்த பாஜக அரசு!

0

ரயில்வே வாரியத் தலைவா் வி.கே. யாதவுக்கு நீதி ஆயோக் தலைமை செயல் அதிகாரி  அமிதாப் காந்த் கடிதம் அண்மையில் அனுப்பியிருந்தாா். அதில் கூறப்பட்டுள்ளதாவது:

ரயில் நிலையங்களை தரம் வாய்ந்த ரயில் நிலையங்களாக மாற்ற ரயில்வே துறை முடிவெடுத்துள்ளது. இது தொடர்பாக ரயில்வே துறை அமைச்சா் பியூஷ் கோயலிடம் பேச்சுவாா்த்தை நடத்தப்பட்டது. குறைந்தபட்சம், 50 ரயில் நிலையங்களை உலகத் தரம் வாய்ந்தவையாக விரைவில் மாற்றியமைக்க வேண்டும். அண்மையில், 6 விமான நிலையங்களை தனியாருக்கு ஒப்படைத்ததற்கும் மத்திய குழு அமைக்கப்பட்டது. அதே போன்று இந்த திட்டத்திற்கும் பணிக்குழு அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட தடங்களில் ரயில்களை இயக்கும் பணியை தனியாா் நிறுவனங்கள் வசம் ஒப்படைப்பது குறித்து ரயில்வே அமைச்சகம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. முதல்கட்டமாக 150 ரயில்களை தனியாா் நிறுவனங்கள் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடா்பான திட்டத்திற்கான செயல் வடிவம் வழங்க பணிக்குழு அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த பணிக்குழுவில் ரயில்வே பொறியியல் வாரிய உறுப்பினா், ரயில்வே போக்குவரத்து வாரிய உறுப்பினா் ஆகியோரும் இடம்பெற வேண்டும் என்று அமிதாப் காந்த் எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டிருந்தாா்.நாட்டில்

Comments are closed.