தனியாருக்கு தாரை வார்த்த பாஜக அரசு: தேஜாஸ் ரயிலில் கட்டண கொள்ளை!

0

இந்தியாவில் பொது ரயில் சேவையை தனியார் மயமாக்கும் தீவிர முயற்சியில் மத்திய பாஜக அரசு தீவிரம் காட்டியுள்ளது.

ஒரே ஆண்டிற்குள் 150 ரயில்களை தனியாருக்கு கொடுக்க முடிவுசெய்து, முதல் தனியார் தேஜாஸ் ரயிலை கடந்த 4ஆம் தேதி லக்னோ – டெல்லி இடையே ஓட விட்டுள்ளது. தேஜாஸ் ரயில் சேவை தொடங்கப்பட்ட 10 நாள்களில் இந்த ரயிலின் கட்டணம், ரயில்வே விதிகளை மீறி இரண்டு மடங்காக அதிகரிக்கப்பட்டிருப்பது பயணிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

1989ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட சட்ட விதிகளின்படி பயணிகள் மற்றும் சரக்கு ரயில் கட்டணங்களை மத்திய அரசு மட்டுமே நிர்ணயிக்க முடியும். ரயில்வேயின் அங்கமான ஐ.ஆர்.சி.டி.சி-யும் இதில் தலையிட முடியாது.

ரயில்வே இயக்கும் சதாப்தி எக்ஸ்பிரஸ், டெல்லியிலிருந்து லக்னோ வரையிலான 211 கிலோ மீட்டர்களை 6 மணி நேரம் 35 நிமிடங்களில் கடக்கிறது. அதில் ஏசி வகுப்புகளுக்கு 1,165 ரூபாயும் எக்ஸிகியூட்டிவ் வகுப்புகளுக்கு 1,855 ரூபாயும் வசூலிக்கப்பட்டு வருகிறது.

ஆனால், தனியார் தேஜாஸ் ரயிலில், டெல்லியிலிருந்து லக்னோ செல்ல 6 மணி நேரம் 30 நிமிடஙகள் ஆகிறது. இதில் ஏசி வகுப்புகளுக்கு 1,565 ரூபாயும், எக்ஸிகியூடிவ் வகுப்புகளுக்கு 2,450 ரூபாயும் கட்டணமாக வசூலிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

அதுமட்டுமின்றி இந்த தனியார் தேஜாஸ் ரயிலில் சிறுவர்களுக்கு என தனியாக குறைந்த கட்டணம் எதுவும் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.