மோடி மக்களின் காவலாளி இல்லை, பணக்காரர்களின் காவலாளி!

0

பிரதமர் மோடியை பணக்காரர்களின் காவலாளி என்று கூறிய காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி.

தேர்தலுக்காக இன்று முதல் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி உத்தர பிரதேசத்தில் பிரச்சாரம் செய்து வருகிறார். இதில் முதல் நாளே நரேந்திர மோடியை விலாசி பேசியுள்ளார்.

நரேந்திர மோடியை பற்றி பிரியங்கா காந்தி பேசியதாவது: தொழில் அதிபர்கள் நன்றாக இருப்பதற்காக மோடி ஆட்சி நடத்தி வருகிறார். அவர்களின் நலனுக்ககவே மோடி திட்டங்களையும் கொண்டு வருகிறார். விவசாயிகளுக்காக எந்த திட்டத்தையும் கொண்டு வரவில்லை. அவர் ஏழை மக்களை கண்டுகொள்ளவில்லை. மோடி அவரது பெயரை காவலாளி என்று கூறிவருகிறார். அதுமட்டுமில்லாமல் டிவிட்டரில் அவர் பெயருக்கு முன்னால் காவலாளி என்றும் சேர்த்துள்ளார். ஆனால் மோடி மக்களின் காவலாளி கிடையாது. மோடி பணக்காரர்களின் காவலாளியாக மட்டும் தான் செயல்பட்டு வருகிறார். இவ்வாறு காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி பேசினார்.

Comments are closed.