“ஹிட்லரை போல் செயல்படும் மோடி”- மலேசிய போராட்டக்காரர்கள்!

0

CAA மற்றும் NRC எதிர்த்து மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் (நேற்று) வெள்ளிக்கிழமை தொழுகைக்கு பிறகு இஸ்லாமியர்கள் போராட்டம் நடத்தினர்.

இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு, மோடி இஸ்லாமியர்களை ஒடுக்குவதில் இஸ்‌ரேலை பின்பற்றுவதாக  தெரிவித்தனர்.

“இஸ்‌ரேலுடன் நெருக்கமாக உள்ள மோடி, அங்கு பயணம் மேற்கொண்ட போது எவ்வாறு பாலஸ்தினிர்களை அகதிகளாக இஸ்‌ரேல் மாற்றியுள்ளது என்பதை பார்த்து வந்துள்ளார். ஆகவே இஸ்‌ரேல் வழிமுறைகளை மோடியும் பின்பற்றுகிறார்.”

“மோடி அரசு ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தங்களை நடைமுறைப்படுத்த விரும்புவதால் இஸ்லாமியர்களுக்கு எதிரான சட்டங்களை நிறைவேற்றி வருகிறது,” என்று  போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.

இந்த போராட்டம் குறித்து ஒற்றுமை மற்றும் தொலைநோக்கு இஸ்லாமிய அமைப்பின் தலைவர் கூறுகையில்: “மோடி தற்போது ஹிட்லரைப் போல் செயல்படுகிறார். இன்று இஸ்லாமியர்களுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி நாளை மற்ற சமூகங்களுக்கும் ஏற்படவாய்ப்புள்ளது.

ஹிட்லரின் நாஜி படைகள் சிறுபான்மையினரை விரட்டியது போலவே இந்தியாவும் அந்த பாதையில் செல்வது போல் தோன்றுகிறது. CAA சட்டம் இஸ்லாமியர்களுக்கு மட்டுமே பாதிப்பை ஏற்படுத்தும் என சொல்ல முடியாது. எதிர்காலத்தில் மற்றவர்களுக்கும் பாதிப்பு ஏற்படலாம்” என்றார்.

மேலும், குடியுரிமை திருத்த சட்டம் குறித்த தங்களது கோரிக்கைகள் அடங்கிய மனு ஒன்றை மலேசியாவில் உள்ள இந்திய தூதரகத்தில் மலேசிய இஸ்லாமிய அமைப்புகள் ஒப்படைத்தது.

Comments are closed.