ரயில்வே துறையை தனியாரிடம் ஒப்படைக்க பாஜக அரசு முடிவு

0

பயணிகள் ரயில் இயக்கத்தில் தனியார் நிறுவனங்களை அனுமதிக்கும் திட்டம் தொடர்பாக நடவடிக்கைகளை ரயில்வே புதன்கிழமை தொடங்கியது.

109 வழித்தடங்களில் 151 நவீன ரயில்களை இயக்குவதற்காக தகுதியான நிறுவனங்களின் விண்ணப்பங்களை மத்திய ரயில்வே கேட்டுள்ளது.

ஒரு தொடர்பாக ரயில்வே வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

ரயில்வேயில் நவீன தொழில்நுட்பங்களை புகுத்துதல், பயண நேரத்தை குறைத்தல், வேலைவாய்ப்புகளை உருவாக்குதல், பாதுகாப்பை அதிகரித்தல், உலக தரத்திலான அனுபவத்தை பயணிகளுக்கு வழங்குதல் ஆகியவற்றை குறிக்கோளாக கொண்டே ரயில்வேயில் தனியாரை அனுமதிக்க முடிவெடுக்கப்பட்டது.

அதன்படி, இந்திய ரயில்வேயில் 12 பிரிவுகளின் கீழ் 109 வழித்தடங்களில் மொத்தம் 151 நவீன ரயில்களை தனியார் மூலமாக இயக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. அந்த ரயில்களை இயக்குவதற்கு தகுதியான தனியார் நிறுவனங்களை அறிய விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன.

பாஜக ஆட்சியில் நாட்டின் பொருளாதாரம் இதுவரை இல்லாதளவு வீழ்ச்சியை நோக்கி சென்றுக்கொண்டுள்ளது. நாட்டின் முக்கிய சேவைகளான விமான சேவை போன்றவற்றை தனியாருக்கு தாரை வார்த்த பாஜக அரசு, ISROவின் ராக்கெட் தயாரிப்பு, செயற்கைக்கோள் ஏவுதல் சேவையிலும் தனியாருக்கு அனுமதி வழங்கப்படும் என பாஜக அரசு முடிவெடுத்துள்ளதாக இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் தற்போது நாட்டின் பெரும் முக்கியத்துவம் வாய்ந்த ரயில்வே துறையையும் தனியாரிடம் ஒப்படைக்க பாஜக அரசு தீவிரம் காட்டி வருகிறது.

மக்களுக்கு விரோத திட்டமான ரயில்வே வழித்தடங்களில் தனியார் ரயில்கள் இயக்க அனுமதிக்கும் திட்டத்தையும், ரயில்வே வழித்தடங்களை தனியாரிடம் ஒப்படைக்கும் திட்டத்தையும் மத்திய பாஜக அரசு கைவிட வேண்டும் என பல தரப்பினர் கண்டங்களை தெரிவித்து வருகின்றனர்.

Comments are closed.