CAA சட்டத்திற்கு எதிராக புதுச்சேரி சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்

0

கேரள, பஞ்சாப், ராஜஸ்தான், மேற்குவங்கம், மத்திய பிரதேசம் ஆகிய 5 மாநிலங்களை தொடர்ந்து தற்போது 6வது மாநிலமாக புதுச்சேரியில் CAA சட்டத்திற்கு எதிராக தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

குடியுரிமை சட்ட திருத்தத்தை திரும்ப பெறக்கோரி, காங்கிரஸ் ஆளும் மாநிலங்களிலும், எதிர்கட்சிகள் ஆளும் மாநிலங்களிலும் சட்டசபைகளில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு வருகிறது.

அந்த வகையில் புதுச்சேரி சட்டசபையின் சிறப்பு கூட்டம் இன்று காலை கூடியது. அதில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான தீர்மானத்தை முதல்வர் நாராயணசாமி வாசித்தார். ஆனால் இதை பாஜகவினர் ஏற்காமல், கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் விவாதத்திற்கு பின் காங்கிரஸ், தி.மு.க. ஆகிய கட்சிகளின் உறுப்பினர்கள் ஆதரவுடன் CAAக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதேபோன்று (NPR) தேசிய குடிமக்கள் பதிவேடு, (NRC) தேசிய மக்கள்தொகை பதிவேடு ஆகியவற்றுக்கு எதிராக கொண்டு வந்த தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.

கடந்த சில நாட்களுக்கு குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டுவந்தால் அதை ஏற்றுக்கொள்ள முடியாது என புதுவை முதல்வர் நாராயணசாமிக்கு ஆளுநர் கிரண்பேடி கடிதம் எழுதியிருந்தார். ஆனால் அதையெல்லாம் மீறி முதல்வர் நாராயணசாமி CAAக்கு எதிரான தீரமானத்தை தைரியமாக நிறைவேற்றினார்.

Comments are closed.