புனே இளைஞர் மொஹ்சின் ஷேக் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஹிந்து ராஷ்டிர சேனா தலைவர்க்கு பிணை

0

புனே இளைஞர் மொஹ்சின் ஷேக் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஹிந்து ராஷ்டிர சேனா தலைவர் தனன்ஜெய் தேசாய்க்கு பிணை

2014 ஆம் ஆண்டு மோடி அரசு பதவி ஏற்றதும் முதல் விக்கட் என்று இந்துத்வா கும்பலால் கூறப்பட்டு ஜூன் 2ஆம் தேதி கொலை செய்யப்பட்ட இளைஞர் மொஹ்சின் ஷேக் கொலை வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட ஹிந்து ராஷ்டிர சேனா அமைப்பின் தலைவர் தனன்ஜெய் தேசாய்க்கு பாம்பே உயர்நீதிமன்றம் பிணை வழங்கி உத்தரவிட்டுள்ளது.

பிணைக்காக தேசாய் தரப்பு வழக்கறிஞர்கள் தயாரித்த அபிடவிட்டில், தேசாய் ஹிந்து ராஷ்டிர சேனா அல்லது வேறு எவரும் நடத்தும் எந்த ஒரு பொது அல்லது அரசியல் பேரணிகளில் பங்கெடுக்க மாட்டார் என்றும் தேசாய் எந்த ஒரு நிகழ்ச்சியிலும் எந்த வகையிலும் சொற்பொழிவு செய்ய மாட்டார் என்றும் ஹிந்து ராஷ்டிர சேனா தொடர்பான அனைத்து சுவரொட்டிகள் பேனர்கள் அனைத்தையும் அவர் அகற்றி விடுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்தகைய பிணை கட்டுப்பாடுகளுடன் அவர் பிணையில் விடுவிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கபப்டுகிறது.

Comments are closed.