பஞ்சாப் உள்ளாட்சி தேர்தலில் பாஜக படுதோல்வி

0

பஞ்சாப் மாநிலத்தில் நடைபெற்ற முடிந்த உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றியைப் பெற்றுள்ளது. சிரோமணி அகாலிதளம், ஆம் ஆத்மி, பாஜக ஆகியவை படுதோல்வி அடைந்துள்ளது.

பஞ்சாப்பில் 8 மாநகராட்சிகள் மற்றும் 109 நகராட்சிகள், பேரூராட்சிகளுக்கு பிப்ரவரி 14ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. மொத்தம் 9,222 பேர்  பல்வேறு பதவிகளுக்குப் போட்டியிட்டனர்.  71.39 சதவீத வாக்குகள் பதிவானது. இதில் பதிண்டா, ஹோசியார்பூர், கபூர்தலா, பதான்கோட், மோகா, அபோகர் உட்பட 7 மாநகராட்சிகளை காங்கிரஸ் கட்சி கைப்பற்றியது.

சிரோமணி அகாலிதளம், ஆம் ஆத்மி கட்சிகள் எந்த மாநகராட்சியையும் கைப்பற்றவில்லை.

தனித்துப்போட்டி யிட்ட பாஜக ஒரு மாநகராட்சியை கூட கைப்பற்றாமல் படுதோல்வியடைந்தது.

விவசாயிகள் விரோத வேளாண் சட்டங்களுக்கு பஞ்சாப் விவசாயிகள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில், உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் பெரும் வெற்றியடைந்துள்ளது.

Leave A Reply