பஞ்சாப்பில் ஜியோ டவர்களின் மின் இணைப்புகளை துண்டித்து விவசாயிகள் போராட்டம்

0

மத்திய பாஜக அரசின் புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து போராடி வரும் விவசாயிகளின் போராட்டம் தீவிரம் அடைந்து 30 நாட்களாக நடைபெற்று வருகிறது. அண்மையில் ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான பெட்ரோல் பங்க் மற்றும் சில்லறை வணிக நிறுவனங்களில் முற்றுகை போராட்டம் நடத்தினர்

இந்நிலையில் பஞ்சாப் மாநிலத்தில் நிறுவப்பட்டுள்ள ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான ஜியோ நிறுவனத்தின் செல்போன் கோபுரங்கள் இயங்க தேவைப்படும் மின்சாரத்தை துண்டித்து தங்களது எதிர்ப்பை தீவிரப்படுத்தினர் விவசாயிகள்.

அந்த மாநிலத்தில் உள்ள பல்வேறு விவசாய சங்க தலைவர்கள் ஒன்றாக இணைந்து 7 மாவட்டங்களில் உள்ள ஜியோ டவர்களுக்கான மின் இணைப்பை கடந்த சில நாட்களாக துண்டித்து வருகின்றனர். “எங்களது எதிர்ப்பை பதிவு செய்வதற்காக இதை செய்துள்ளோம். எங்களது போராட்டம் கார்ப்பரேட்களை எதிர்த்து தான். அதனால் இவ்வாறு செய்துள்ளோம். விவசாயிகளுக்கு எதிராக உள்ள இந்த புதிய சட்டங்களால் கார்ப்பரேட்களுக்கு ஆதாயம் உள்ளது. எங்களது போராட்டத்திற்கு கண்டுக்கொள்ளாத பாஜக அரசின் காதுகளை எட்டும் வரை இப்போராட்டம் தொடரும்” என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

Comments are closed.