ஆட்சி பறிபோனாலும் கவலையில்லை: எனக்கு விவசாய நலனே முக்கியம் -அமரிந்தா் சிங்

0

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப் மாநில சட்டப்பேரவையில் மாநில அரசு சார்பில்  தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பஞ்சாப் முதல்வர் அமரிந்தா் சிங் பத்திரிகையாளர்களிடம் விவசாய சட்டத்திற்கு எதிரான தீர்மானம் குறித்து கூறுகையில்,

பஞ்சாபின் குரல் ஆளுநரை சென்றடைந்தது, அவர் அதை குடியரசுத் தலைவருக்கு அனுப்புவார். பஞ்சாபில் நடக்கும் போராட்டங்களின் விளைவாக குடியரசு தலைவர் ஆட்சியை வந்தாலும் எனக்கு கவலையில்லை.

நீங்கள் எனது அரசாங்கத்தை பதவி நீக்கம் செய்ய விரும்புகிறீர்கள் என்றால் எனது அரசை பதவி நீக்கம் செய்யுங்கள். நான் எந்தொரு பாதிப்பையும் மக்களுக்கு கொடுக்கவில்லை. நான் செய்வது அனைத்தும் மாநில மற்றும் நாட்டின் விவசாயிகள் நலனுக்காக” என்று அமரிந்தர் சிங் கூறுகிறார்.

மேலும், விவசாய சட்டங்களுக்கு எதிரான தீர்மானத்தின் போது சட்டப் பேரவையில் பேசிய அமரிந்தர் சிங், “முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்யவோ அல்லது ஆட்சிக் கலைந்துவிடும் என்றோ நான் பயப்படவில்லை. விவசாயிகளின் நலனுக்காக அதையும் எதிர்க்கொள்ள நான் தயாராக உள்ளேன். பஞ்சாபில் 1980 மற்றும் 90களில் இருந்தது போல் போராட்டம் வலுபெற்று உள்ளது” என்றார்.

Comments are closed.