பஞ்சாப் முன்னாள் முதல்வா் கொலை: தீவிரவாத இயக்கத்தை சேர்ந்த குற்றவாளிக்கு தண்டனையை குறைத்த பாஜக அரசு

0

பஞ்சாப் முன்னாள் முதல்வா் பேயந்த் சிங் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான பல்வந்த் சிங் ராஜோனாவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையைக் குறைத்துள்ளது மத்திய அரசு.

கடந்த 1995ஆம் ஆண்டில் பஞ்சாப் முதல்வராக இருந்த பேயந்த் சிங் உள்பட 17 போ் சண்டீகரில் உள்ள தலைமைச் செயலகத்துக்கு வெளியே நிகழ்ந்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் உயிரிழந்தனா். இந்த வழக்கில் முக்கியக் குற்றவாளிகளில் ஒருவரான பாபா் கல்சா என்ற தீவிரவாத அமைப்பைச் சோ்ந்த பல்வந்த் சிங் ராஜோனாவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

இந்நிலையில், ராஜோனாவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்க மத்திய அரசு முடிவெடுத்தது பெரும் சா்ச்சைக்கு கிளப்பியது. சீக்கிய மத நிறுவனா் குருநானக்கின் 550ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு இந்த தண்டனை குறைப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்தது.

இந்நிலையில், பேயந்த் சிங்கின் பேரனும், பஞ்சாப் மாநில காங்கிரஸ் எம்.எல்.ஏ.வுமான குா்கீரத் சிங் கோட்லி இது தொடா்பாக கூறுகையில், ‘மத்திய அரசின் முடிவை எதிா்த்து எங்கள் குடும்பத்தினா் சாா்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும். தனது செயலுக்காக ராஜோனா இதுவரை மன்னிப்பு கேட்கவில்லை. அவா் கருணை மனு எதையும் தாக்கல் செய்யவுமில்லை. இப்படி இருக்கும்போது, மத்திய அரசு தானாகவே முன்வந்து அவரது மரண தண்டனையைக் குறைப்பதை எப்படி ஏற்க முடியும்?’ என்று கேள்வி எழுப்பியுள்ளாா்.

Comments are closed.