ரஃபேல் ஊழல் வழக்கு: சீராய்வு மனுக்களை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம்

0

இந்திய விமானத்துறைக்கு மத்திய அரசு 36 ரஃபேல் விமானங்களை வாங்கியதில் முறைகேடு இருப்பதாக காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டி உச்சநீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்தது.

இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் ரபேல் போர் விமானம் வாங்கப்பட்ட தொகை, ஒப்பந்தம் ஆகிய அனைத்தும் சரியான முறையில் தான் இருக்கிறது .இதை தொடர்ந்து கடந்த ஆண்டு டிசம்பர் 14-ம் தேதி ரஃபேல் விமானங்களை வாங்கியதில் முறைகேடு இல்லை என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இந்நிலையில் ரஃபேல் விமானங்களை வாங்கியதில் முறைகேடு இல்லை என கூறிய தீர்ப்பை சீராய்வு செய்ய கோரி மனுதாக்கல் செய்யப்பட்டது. அதன்படி தலைமை நீதிபதி ரன்ஜன் கோகாய், நீதிபதிகள் கே.எஸ்.கவுஸ், கே.எம்.ஜோசஃப் ஆகியோர் கொண்ட அமர்வு சீராய்வு மனுக்களை தள்ளுபடி செய்தது.

Comments are closed.