இந்திய பொருளாதாரம் வீழ்ச்சியை நோக்கி செல்வதால் கவலை அளிக்கிறது: ரகுராம் ராஜன்!

0

இந்திய பொருளாதாரம் வீழ்ச்சியை நோக்கி செல்வது கவலை அளிப்பதாக ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் கூறியுள்ளார்.

இதுகுறித்து பேட்டியில் ரகுராம் ராஜன் கூறியிருப்பதாவது: “இந்தியாவின் பொருளாதார வீழ்ச்சி கவலை அளிக்கிறது. பொருளாதார வளர்ச்சி விகிதம் 6.8 சதவிகிதமாக குறைந்து விட்டது. கடந்த 2014ஆம் ஆண்டில் இருந்து இதுவே குறைந்த அளவாகும்.

ஆட்டோமொபைல், ரியல்எஸ்டேட், நுகர்வோர் உற்பத்திநிறுவனங்கள் என எல்லாவற்றிலும் வீழ்ச்சி காணப்படுகிறது. இந்த சூழலில் பொருளாதாரத்தையும், வளர்ச்சி விகிதத்தையும் அதிகரிக்க புதிய சீர்திருத்தங்கள் கொண்டுவரப்பட வேண்டும். சர்வதேச சந்தையில் கடன்பெறுவது சீர்திருத்தம் அல்ல, அது தந்திர நடவடிக்கையாகவே இருக்கும்.

தனியார் துறையினர் முதலீடு செய்வதை தூண்டும் வகையில் சீர்திருத்தம் இருக்க வேண்டும். 2008ஆம் ஆண்டை போன்ற பெரிய பொருளாதார வீழ்ச்சி, மீண்டும் ஏற்படாது என்று என்னால் கணிக்க முடியாது. ஆனால், அப்படி ஏற்பட்டால், அது வேறு காரணங்களால்தான் ஏற்படும். தற்போதைய பிரச்சனைகளை களைத்தாலும், புதிய பிரச்சனைகள் வருவதை தடுக்க முடியாது” இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Comments are closed.