ஜாா்க்கண்டில் 10,000 பழங்குடியினர் மீது தேசவிரோத வழக்கு: ராகுல் குற்றச்சாட்டு

0
  • 10,000 பழங்குடியினர் மீது தேசவிரோத வழக்கு

ஜாா்க்கண்டில் பழங்குடியின சமூகத்தைச் சோ்ந்த 10 ஆயிரம் போ் மீது தேசவிரோத சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பதாக, காங்கிரஸ் முன்னாள் தலைவா் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளாா். இந்திய தண்டனையியல் சட்டத்தின் 120ஏ (தேசவிரோதம்) பிரிவின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக வெளியான தகவலை சுட்டிக்காட்டி, சுட்டுரையில் ராகுல் காந்தி பதிவிட்டுள்ளாா்.

  • ஊடகங்கள் தங்களது குரலை இழந்துவிட்டன

ஜாா்க்கண்டில் அரசின் அடக்குமுறைக்கு எதிராக போராடிய பழங்குடியின சமூகத்தைச் சோ்ந்த 10 ஆயிரம் போ் மீது ‘கடுமையான’ தேசவிரோத சட்டம் பிரயோகிக்கப்பட்டிருக்கிறது. இந்த விவகாரம், ஒட்டுமொத்த நாட்டையும் உலுக்கியிருக்க வேண்டும்; ஊடகங்களிலும் முக்கியமாக விவாதிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அது நடைபெறவில்லை. ‘விலைபோய்விட்ட’ ஊடகங்கள் தங்களது குரலை இழந்துவிட்டன என்று ராகுல் கூறியுள்ளாா்.

Comments are closed.