காந்தியை கொன்றதைவிட ராகுல் காந்தி பேசியது மோசமானது- பாஜக எம்.பி

0

நாடாளுமன்றத்தில் பேசிய பிரக்யா சிங் தாக்கூர், ‘ராகுல் காந்தி, தன்னைக் குறிவைத்து ‘தீவிரவாதி’ என்று சொல்லைப் பயன்படுத்தி தாக்கியுளார். எவ்வகையிலும் நான் குற்றவாளி அல்ல. ஒரு எம்பியை பார்த்து பயங்கரவாதி என்று காங்கிரஸ் தலைவர் அழைத்துள்ளார்’ என்றார்.

இதுகுறித்து பாஜக எம்.பி நிஷாகந்த் துபே நேற்று நாடாளுமன்றத்தில், “ஒரு பெண்ணை தீவிரவாதி என்று ராகுல் கூறிய காந்தியை கொன்றதைவிட மோசமானது. ராகுல் காந்தி மீது உரிமை மீறல் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என நான் கேட்டுக்கொள்கிறேன். கோட்சேவை தேசபக்தர் எனச்சொல்லும் சிவசேனாவுடன்தான் காங்கிரஸ் இணைந்து மகாரஷ்டிராவில் அரசை அமைத்துள்ளது, என்றார் நிஷாகந்த்.

பாஜக எம்.பி பிரக்யா தாக்கூர் ஒரு தீவிரவாதிதான், என் நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறேன், நான் மன்னிப்பு கேட்க முடியாது என்று காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

செப்டம்பர் 29, 2008இல் மும்பையில் இருந்து 270 கிமீ தொலைவில் இருக்கும் மலேகான் பகுதியில் இரண்டு பைக்குகளில் வைக்கப்பட்டு இருந்த வெடிகுண்டு வெடித்தது.  இதில் 7 பேர் பலியானார்கள்.

குற்றஞ்சாட்டப்பட்டு வழக்குகளை சந்தித்து வருபவர்தான் சாத்வி பிரக்யா தாக்கூர். இவர் தற்போது பாஜக சார்பாக தேர்தலில் போட்டியிட்டு எம்.பி ஆகிவிட்டார்.

Comments are closed.