ராஜஸ்தான் சிறுமி பாலியல் வழக்கு: பாஜக தலைவர் உள்பட 5 பேர் கைது

0

ராஜஸ்தான் மாநிலத்தில் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது தொடர்பாக பாஜக மகளிர் அணி தலைவர் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ராஜஸ்தான் மாநிலம் சவாய் மாதோபூரில் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இது தொடர்பான வழக்கை விசாரித்த காவல்துறையினர் 5 பேரை கைது செய்துள்ளனர். “கைது செய்யப்பட்டவர்களில் முன்னாள் பாஜக மஹிலா மோர்ச்சா மாவட்ட தலைவர் பாஜக மகளிர் அணி ஸ்மிதா வர்மா மற்றும் இரண்டு அரசு அதிகாரிகளும் அடங்குவர்.

சிறுமியை வெவ்வேறு இடங்களில் 8 முறைக்கு மேல் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். அவர்கள்மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பதாக மாவட்ட எஸ்.பி. ஓ.பி. சோலங்கி தெரிவித்து உள்ளார்.

Comments are closed.