ஆட்டு சந்தை அரசியல் செய்யும் பாஜக -ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்

0

ராஜஸ்தானின் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியை கவிழ்க்க எம்.எல்.ஏ.க்களுக்கு ரூ.15 கோடி அளிக்க பா.ஜ.க முயற்சி செய்வதாக ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் குற்றம்சாட்டியுள்ளார்.

இது குறித்து அம்மாநில முதல்வர் அசோக் கெலாட் கூறியதாவது: “நாடு முழுவதும் கொரோனா வைரஸுக்கு எதிராக போராடி வரும் நிலையில் பா.ஜ.க தொடர்ந்து தொல்லை கொடுத்து வருகிறது. பா.ஜ.க எல்லை மீறி ஆட்டு சந்தை அரசியலில் ஈடுபட்டு வருகிறது.

இது வாஜ்பாய் ஆட்சிக்காலம் போல அல்ல. 2014-ம் ஆண்டுக்கு முன்பு மறைமுகமாக செய்ததை ஆட்சிக்கு வந்தபிறகு பா.ஜ.க மிக மோசமான முறையில் செயல்படுத்தி வருகிறது.

காங்கிரஸ் ஆட்சியைக் கவிழ்க்க பெரிய அளவில் சதித்திட்டத்தை பாஜக தீட்டி வருகிறது. ஆட்சியை கவிழ்க்க எம்.எல்.ஏ.க்களுக்கு ரூ.15 கோடி வரை அளிக்க பாஜக அரடு முன்வருவதாகவும் தெரிகிறது.

இதுபோன்ற முயற்சியில் ஈடுபட்டு வரும் பாஜகவை மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கின்றனர். வரும் தேர்தல்களில் பா.ஜ.கவின் திமிர் போக்கு உடைக்கப்படும். மக்கள் பாடம் புகட்டுவார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.

Comments are closed.