CAAக்கு எதிராக ராஜஸ்தான் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்

0

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் தீவிர போராட்டம் நடந்து வரும் நிலையில், இந்த சட்டத்திற்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து கேரள அரசு முதன்முதலில் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியது. மேலும் மத்திய அரசு திரும்பப்பெற வலியுறுத்தி அம்மாநில அரசு டெல்லி உச்ச நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்தது.

கேரள அரசை தொடர்ந்து பஞ்சாப் மாநில சட்டசபையில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் மேற்கு வங்கத்திலும் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றவுள்ளதாக அம்மாநில அரசு அறிவித்தது.

ராஜஸ்தான் சட்டசபையில் பல்வேறு பாஜக உறுப்பினர்கள் சிஏஏக்கு ஆதரவாக முழக்கமிட்டனர். இதனால் ஏற்பட்ட அமளிக்கு இடையிலும் சிஏஏவுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட தீர்மானம் நிறைவேறியது.

மேலும் காங்கிரஸ் மற்றும் இதர கட்சிகள் ஆட்சி செய்யக்கூடிய மாநிலங்களில் தீர்மானங்கள் நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Comments are closed.